
மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சீரடி சாய்பாபா கோவில் இருக்கிறது. சாய்பாபாவுக்கு உகந்த நாளான வியாழக்கிழமை அன்று பக்தர்களின் கூட்டம் அலைமோதும். இந்நிலையில் இந்த கோவிலில் குரு பூர்ணிமாவையொட்டி ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஒரே நாளில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
அப்போது காணிக்கையாக பக்தர்கள் உண்டியலில் பணம் செலுத்தினர். இந்நிலையில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்ட நிலையில், அதில் பல கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. அதன் படி 6.25 கோடி ரூபாய் வசூலானது. அதோடு 8 லட்சம் தங்கம் மற்றும் 5 கிலோ வெள்ளி பொருட்களும் வசூலாகியுள்ளது. மேலும் கடந்த 3 நாட்களில் 205 பக்தர்கள் ரத்ததானம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.