தெலுங்கானா மாநிலம் வாரங்கல் நகர் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் உள்ள 2 சிறுவர்கள் ஏடிஎம் இயந்திரத்தில் நூதன முறையில் கொள்ளையடித்துள்ளனர். அதாவது வாரங்கல் நகர் பகுதியில் உள்ள சுபம் என்ற சிறுவன் காதலித்து வருகிறான். இவன் தனது காதலிக்கு பரிசளிப்பதற்காக பணம் போதாத நிலையில்  பணத்தை திருட முடிவு முடிவெடுத்துள்ளான். அதனால் தனது நண்பனுடன் சேர்ந்து பிளாஸ்டிக் மற்றும் பெவிகால் போன்ற பொருட்களை பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரத்தை உடைக்காமல் பணம் எடுத்துள்ளான்.

அதன்படி பிளாஸ்டிக் ஸ்ட்ரிப்களை ஃபெவிக்கால் கொண்டு ஏடிஎம் எந்திரத்தில் பணம் வெளியே வரும் இடத்தில் ஒட்டி உள்ளனர். அதன் பின் ஏடிஎம்-ல் பணம் எடுக்க வரும் வாடிக்கையாளர்கள் பணம் இல்லை என்று நினைத்து வெளியேறிய பிறகு சிறுவர்கள் உள்ளே சென்று இடையில் சிக்கிக் கொண்ட பணத்தை வெளியே எடுக்கின்றனர். இந்த சம்பவம் அங்கு பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளில் பதிவானது. இதைத் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் சிலர் தங்களது பணம் வங்கி கணக்கிலிருந்து காணாமல் போகிறது என்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தனர். அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை செய்த காவல்துறையினர் ஏடிஎம்-ல் பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து சிறுவர்கள் பணம் திருடுவதை கண்டுபிடித்தனர். இது தொடர்பாக 3 சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இதில் முக்கிய குற்றவாளியான சுபம் மற்றும் அவரது காதலியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள்.