கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கதவணை என்னும் பகுதி உள்ளது. இப்பகுதியில் ராஜ்குமார்- அன்பரசி(27) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி நான்கு ஆண்டுகள் ஆன நிலையில் ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில் அன்பரசி வங்கியில் ஊழியராக தற்காலிகமாக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில்  திடீரென  அன்பரசியின் மகனுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனால் அன்பரசி தனது மகனுடன் வீட்டில் இருந்துள்ளார். அப்போது வீட்டில் தன் கணவர் இல்லாத நேரத்தில் அன்பரசி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் ஊத்தங்கரை காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் அன்பரசியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் ஊர் பொதுமக்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.