தமிழ் சினிமாவில் முன்னணி இசை அமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் யுவன் சங்கர் ராஜா. தற்போது விஜய் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் தி கோட் படத்தில் பணியாற்றி வருகிறார். இந்தப் படத்தில் மறைந்த பாடகி பவதாரணியின் குரல் AI தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து பேசி உள்ள யுவன் சங்கர் ராஜா, லால் சலாம் படத்தை பார்த்த பின்னர் தான் தி கோட் படத்தில் பவதாரணியின் குரலை AI மூலம் பயன்படுத்த முடிவெடுத்ததாக கூறியுள்ளார்.

தான் இசையமைக்கும் எல்லா படங்களுக்குமே அதிக உழைப்பை கொடுத்ததாக கூறிய அவர், சில பாடல்களுக்கு எதிரான விமர்சனங்கள் எழுவது வழக்கம் என்றார். அத்துடன் விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் தனக்கு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.