நடிகை அஞ்சலி தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற திரைப்படங்களிலும் நடித்து வந்துள்ளார். இவர் தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் நடிகை அஞ்சலி தனது சினிமா அனுபவத்தை பற்றி ஒரு பேட்டியில் பேசிவுள்ளார். அதில் அவர் தான் முக்கியமான கதாபாத்திரத்தை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிப்பதாகவும்.

அதற்காக மார்ஷல் ஆர்ட்ஸ் கற்றுக் கொண்டதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து தான் இதுவரைக்கும் சண்டைக் காட்சிகளில் கூட டூப் போடுவது இல்லை என்று கூறியுள்ளார். அதன்பின் பாகிஷ்கரனா என்னும் வெப் சீரியஸில் அந்தரங்க காட்சிகளில் அவர் நடிப்பதற்கு பதட்டமாகவும் கூச்சமாகவும் இருந்தது எனவும் கூறியுள்ளார். மேலும் சில வலைதளங்களில் தன்னை அவதூறாக விமர்சனம் செய்து வருகின்றனர். அவ்வாறு விமர்சனம் செய்வதால் தனக்கு வேதனையளிக்கின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.