
திருவண்ணாமலை மாவட்டம் கட்டமடுவு என்னும் பகுதியில் தேவராஜ்(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது இருசக்கர வாகனத்தில் அண்ணாமலை என்பவருடன் சிங்காரப்பேட்டையில் இருந்து திருப்பத்தூர் சென்றுள்ளார். அப்போது அவர் நார்சாம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் ஒன்று தேவராஜ் ஓட்டி சென்ற இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்த தேவராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதோடு அண்ணாமலை என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் தேவராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு அண்ணாமலையை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து சிங்காரப்பேட்டை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.