தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால். இவர் நடிப்பில் கடைசியாக மார்க் ஆண்டனி மற்றும் ரத்னம் போன்ற திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகர் விஷாலுக்கு தற்போது தயாரிப்பாளர்கள் சங்கம் புது கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது.

அதாவது நடிகர் விஷாலை வைத்து படம் எடுப்பதற்கு முன்பாக தயாரிப்பாளர்கள் சங்கத்தை கலந்தாலோசனை செய்ய வேண்டும். அதன் பிறகு தான் அவரை வைத்து படத்தை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நடிகர் விஷால் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்தபோது 12 கோடி நஷ்டம் ஏற்பட்டது. மேலும் இந்த இழப்பு தொடர்பாக நடிகர் விஷால் இதுவரை பதில் அளிக்காத நிலையில் அவருடைய படங்களுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது