
ஒடிசாவில் சரக்கு ரயில் தடம் புரண்டதால் புவனேஸ்வர் மார்க்கத்தில் ரயில்கள் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. புவனேஸ்வர் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலின் இரண்டு பெட்டிகள் திடீரென்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இந்த நிலையில் மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் ஐந்து முறை சரக்கு ரயில் ஒரு முறை பயணிகள் ரயிலும் விபத்துக்குள்ளாகியுள்ளது. ரயில் விபத்துக்களை தடுக்க அரசு பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் போதிலும் ரயில் விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.