ஒலிம்பிக் போட்டியில் இன்று துப்பாக்கி சூடு போட்டியில் சீனா தங்க பதக்கத்தை வென்றது. பாரிஸ் ஒலிம்பிக்கில் முதல் தங்கப் பதக்கத்தை சீனா துப்பாக்கி சுடும் வீரர்கள் கைப்பற்றினர். பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பத்து மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டிகள் நடைபெற்றது.

இந்த போட்டியில் இந்திய வீரர்கள் கொண்ட அணி பங்கேற்றது. இந்த போட்டியின் இறுதி சுற்றில் சீன நாட்டு அணி அதிக புள்ளிகளை பெற்று தங்க பதக்கத்தை வென்றனர். தென் கொரியா அணியை தோற்கடித்து சீனா வெற்றி பெற்றது. இந்தியா வீரர்கள் தகுதி சுற்றிலேயே வெளியேறியது இந்திய ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.