
சர்வதேச விண்வெளி மையத்திற்கு சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஜூன் மாதம் 5-ம் தேதி விண்வெளிக்கு சென்றனர். அவர்கள் விண்வெளிக்கு சென்று 50 நாட்கள் ஆன நிலையில் ஹீலியம் கசிவு, த்ரஸ்டர் செயலிழப்பு போன்ற பிரச்சனைகளால் அவர்கள் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. இதில் ஸ்டார் லைனர் விண்கலம் 90 நாட்கள் மட்டுமே விண்வெளியில் இருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால் அவர்கள் எப்படி பூமிக்கு திரும்புவார்கள் என்ற எதிர்பார்ப்பு பெரிய அளவில் நிலவியது. இந்நிலையில் தற்போது விண்கலத்தில் ஏற்பட்ட ஹீலியம் கசிவு சரி செய்யப்பட்டு விட்டதாக போயிங் நிறுவனம் அறிவித்துள்ளது. அதாவது போயிங் விண்கலத்தில் ஏற்பட்ட ஹீலியம் கசிவை சரி செய்ததால் சோதனை வெற்றி என அந்நிறுவனம் கூறியுள்ளது. மேலும் இதனால் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஆகஸ்டில் பூமிக்கு விரும்புவார்கள் என்று கூறப்படுகிறது.