ஈரோடு மாவட்டம் திங்களூர் என்னும் பகுதியில் வாரந்தோறும் வியாழக்கிழமை சந்தை நடைபெறுவது வழக்கம். இதில் காய்கறிகள் உட்பட அனைத்து பொருள்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சந்தையில் உள்ள விற்பனையாளர்கள் போலி ரூபாய் நோட்டுகள் வருகிறது என காவல் நிலையத்தில் தகவல் கொடுத்தனர். இதனை அடுத்து காவல்துறையினர் சந்தைக்கு சென்று பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இதைத்தொடர்ந்து கடந்த 25ஆம் தேதி சந்தையில் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில் பெரியவர் ஒருவர் பொருட்களை வாங்கியுள்ளார்.

அதற்கான பணம் ரூ. 500 விற்பனையாளரிடம் கொடுக்கும்போது விற்பனையாளர் நோட்டை பார்த்து சந்தேகப்பட்டார். எனவே அவர் காவல் நிலையத்திற்கு தெரிவித்தார்.அதன் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் முதியவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை செய்த போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது. அதாவது அவருடைய வீட்டில் கலர் ஜெராக்ஸ் எந்திரம் வைத்து கள்ள நோட்டுகளை அச்சிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அவர் சத்தியமங்கலம் இக்கரை பள்ளியை சேர்ந்த ஜெயபால்(70) என்பதும்  தெரியவந்தது. மேலும் இந்த  விவகாரத்தில் முக்கிய குற்றவாளிகளான இவருடைய மனைவி சரசு,மகன் ஜெயராஜ்(40) மற்றும் மேரி மெட்டில்டா வை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து கள்ள நோட்டுகள் மற்றும்  கலர் ஜெராக்ஸ் எந்திரம் ஆகியவைகள்  பறிமுதல் செய்யப்பட்டது.