பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசில் 33வது ஒலிம்பிக் போட்டி கடந்த 26 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கியுள்ள நிலையில் மொத்தம் 206 நாடுகள் பங்கேற்றுள்ளது. இந்த போட்டியில் 10,500 க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த போட்டி ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்நிலையில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பல்வேறு நாடுகள் கலந்து கொண்டாலும் குறிப்பாக இரண்டு நாடுகளுக்கு மட்டும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அதாவது ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய இரு நாடுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் ரஷ்யா உக்ரைனுக்கு நாட்டுக்கு எதிராக போரில் ஈடுபட்டுள்ளது. இந்த போரினை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் பல வலியுறுத்தியும் ரஷ்யா கேட்கவில்லை. அதனால்தான் ரஷ்யாவுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் ரஷ்ய நாட்டுக்கு போரில் பெலாரஸ் நாடு உதவி செய்து வருகிறது. அதனால்தான் அந்நாட்டுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.‌ பாரிஸ் ஒலிம்பிக் போட்டி தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக அமைதி பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என ரஷ்யாவிடம் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் வலியுறுத்திய போதிலும் அதனை ரஷ்யா ஏற்க மறுத்ததால் தான் இரு நாடுகளுக்கும் தடைவிதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.