மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவரான ஆரிஃப் அகீல் காலமானார். இவர் கடந்த சில நாட்களாக இதய நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் போபாலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவரது உயிர் பிரிந்தது. முன்னாள் முதல்வர் கமல் நாத் ஆட்சியில் இரண்டு முறை அமைச்சராக பதவி வகித்த இவர் போபால் வடக்கு சட்டமன்ற தொகுதியில் இருந்து ஆறுமுறை எம்எல்ஏவாக வெற்றி பெற்றவர். இவருடைய மறைவுக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.