தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் தற்போது ராயன்  என்ற படத்தை அவரே  இயக்கி நடித்துள்ள நிலையில் அந்த படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடிகர் தனுஷ் நேற்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் தற்போது அவருக்கு ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தயாரிப்பாளர்கள் சங்கம் நடிகர் தனுஷை வைத்து புதிய படங்களை இயக்குவதற்கு முன்பாக தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் கண்டிப்பாக கலந்துரையாடல் செய்ய வேண்டும் என அறிவித்துள்ளது.

அதாவது நடிகர் தனுஷ் பல தயாரிப்பாளர்களிடம் முன்பணம் பெற்றிருக்கிறார். எனவே இனிவரும் காலங்களில் நடிகர் தனுஷை வைத்து புதிய படம் தொடங்குவதற்கு முன்பாக தயாரிப்பாளர்கள் சங்கத்தை கலந்தாலோசனை செய்ய வேண்டும் என்று அறிவித்துள்ளனர். மேலும் நடிகர் தனுஷ் தமிழ் உட்பட தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஹாலிவுட் என அனைத்து மொழிகளிலும் கலக்கி வரும் நிலையில் தற்போது தயாரிப்பாளர்கள் சங்கம் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டது அவருடைய ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.