
இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான எச்டிஎப்சி வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில் எச்டிஎப்சி கிரெடிட் கார்டு விதிகளில் முக்கிய மாற்றங்களை செய்துள்ளது. இனி கிரெடிட், காசோலை, மொபிக்விக், ஃப்ரீசார்ஜ் போன்ற தலங்களில் வாடகை செலுத்தினால் ஒரு சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டும்.
மேலும் பதினைந்தாயிரத்திற்கு மேல் எரிபொருள் கட்டணம் ஒரு சதவீதம் செலுத்த வேண்டும். HDFC Tata New Infinity மற்றும் Tata New Plus கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள், Tata New UPI ஐடி மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு இப்போது 1.5 சதவீத நாணயங்களைப் பெறுவார்கள்.