கேரள மாநிலத்தில் சமீப காலமாக கன மழை பெய்து வரும் நிலையில் வயநாட்டில் பலத்த மழை பெய்து வருகிறது. அந்தப் பகுதியில் தொடர் கனமழையின் காரணமாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. குறிப்பாக இந்த பகுதியில் மழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் ஏராளமான வீடுகள் மண்ணுக்குள் புதைந்த நிலையில் பலர் சிக்கி இருக்கலாம் என்று கூறப்படும் நிலையில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த கோர விபத்தில் 19 பேர் பலியாகியுள்ள  நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 41ஆக உயர்ந்துள்ளது. 71பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நிலச்சரிவு நிகழ்ந்துள்ள வயநாட்டுக்கு ராகுல் மற்றும் பிரியங்கா விரைகின்றனர். மத்திய அரசிடம் பேசி மீட்பு மற்றும் நிவாரண உதவிகளை பெற்று தருவதாக உறுதியளித்த ராகுல் காந்தி அனைத்து அமைப்புகளுடனும் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி மீட்பு பணிகளை மேற்கொள்ள அம் மாநில முதல்வரிடம் வலியுறுத்தினார். மக்களவைத் தேர்தலில் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்ற ராகுல் காந்தி தனது எம்பி பதவியை ராஜினாமா செய்த நிலையில் அங்கு பிரியங்கா போட்டியிட உள்ளார்.