
மணிப்பூர் மாநிலம் டிம்தான்லாங் என்ற பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை அங்கு பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டனர். அப்பகுதியில் காவலரான ரிங்சின்லுங் என்பவர் தன்னுடைய மனைவி மற்றும் 2 வயது குழந்தையுடன் வசித்து வந்தார்.
அப்போது அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் காவலரின் வீடு பாதிப்புக்கு உள்ளானது. அதில் ரிங்சின்லுங் சில காயங்களுடன் உயிர்தப்பினார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் அவருடைய மனைவி மற்றும் குழந்தை நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.