ஆந்திர மாநிலத்தில் சத்ய பிரசாத் என்பவர் அவருடைய குடும்பத்தினரோடு வசித்து வருகிறார். இந்நிலையில் காக்கிநாடா மாவட்டத்தில் சத்யதேவர், அனந்த லட்சுமி எனும் அம்மன் கோவில் ஒன்று இருக்கிறது. இந்த கோவிலானது மிகவும் பிரசித்தி பெற்ற பழமையான கோவிலாகும். இந்நிலையில் சத்ய பிரசாத் வைரத்தாலான கிரீடம் மற்றும் கம்மலை அந்த கோவிலுக்கு காணிக்கையாக வழங்கினார்.

இதன் மதிப்பு சுமார் ரூ.1 1/2 கோடி ஆகும். இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி சத்யதேவரின் நட்சத்திர பிறந்தநாள் கொண்டாடப்பட இருக்கிறது. இதனால் சத்ய தேவரின் பிறந்தநாளை முன்னிட்டு வைர கிரீடத்தை அம்மனுக்கு அணிய இருப்பதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.