தெலுங்கானா மாநிலத்தில் தம்பதியினர் ஒருவர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு அசோக், சேகர் என 2 மகன்கள் உள்ளனர். இந்த தம்பதியினருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் சம்பவ நாளன்று அவர்கள் மது அருந்தி உள்ளனர். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைப் பார்த்து கோவமடைந்த மூத்த மகன் அசோக் அவர்களை திட்டியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அந்த தம்பதியினர் அசோக்கை கொலை செய்ய முடிவு செய்தனர். அப்போது வீட்டில் இரவு நேரத்தில் போர்வையை மூடிக்கொண்டு சேகர் தூங்கிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த அந்த தம்பதியினர் தூங்கிக் கொண்டிருப்பது அசோக் என நினைத்துக் கொண்டு அரிவாளால் சரமாரியாக வெட்டினர். அவருடைய அலறல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர்.

அப்போது சேகர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை அருகிலுள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை மருத்துவர்கள் வழங்கி வந்தனர். இருப்பினும் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அந்த தம்பதிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.