
மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தில் ஐஏஎஸ் பயிற்சி அதிகாரியாக பணியாற்றி வந்தவர் பூஜா கேட்கர். இவர் அலுவலகத்தில் இருப்பவர்களிடம் தனக்கு கலெக்டர் போன்ற மரியாதை வேண்டும் என்று கேட்டதோடு தன்னுடைய சொகுசு காரில் அனுமதி இன்றி சைரன் வைத்து சுற்றினார். இது போன்ற பல்வேறு குற்றசாட்டுகளில் ஈடுபட்டதால் அவரை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டனர்.
இதைத்தொடர்ந்து அவர் யுபிஎஸ்சி தேர்வில் கற்றல் குறைபாடு இருப்பதாக கூறி முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. அதாவது மாற்றுத்திறனாளி என்று போலியான சான்றிதழ் வழங்கியதோடு, ஓபிசி என பொய் சான்றிதழும் கொடுத்துள்ளார். இதன் காரணமாக தற்போது யுபிஎஸ்சி அவரின் சிவில் சர்வீஸ் தேர்வு தேர்ச்சியை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. அதோடு இனி எதிர்காலத்தில் சிவில் சர்வீஸ் தேர்வுகள் எழுதவும் அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.