நாடாளுமன்ற மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி ஒரு கேள்வி எழுப்பினார். அதாவது திருமணமான பெண்கள் தன் பெயரை மாற்றுவதற்கு கணவரிடம் அனுமதி பெற வேண்டுமா என்று கேட்டார். இதற்கு மத்திய மந்திரி டோகன் சாகு பதிலளித்தார். அதாவது திருமணம் ஆன பெண்கள் தன் பெயரை மாற்றுவதற்கு நிச்சயம் கணவரிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். ஏனெனில் ஒருவர் தன் பெயரை மாற்றுவது அடையாளத்தை மாற்றுவது போன்றதாகும்.

இதனால் பெயரை தவறாக பயன்படுத்துவதை தடுப்பது மிகவும் அவசியம். இதனால் திருமணம் ஆன பெண் தன்னுடைய குடும்ப பெயரை மாற்ற வேண்டும் என்றால் நிச்சயம் அவருடைய கணவரிடம் தடையில்லா சான்று பெறுவது அவசியம் என்று கூறினார். மேலும் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் ஒரு பெண் தன்னுடைய கணவரிடம் இருந்து குடும்பப் பெயரை மாற்றுவதற்கு அவரிடமிருந்து தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும் என மத்திய அரசு கூறுவது தொடர்பாக வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் வருகிற 7-ம் தேதி மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.