பாரீஸில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சந்திப்பு ஒரு முதிய தம்பதியின் காதல் கதையை உலகிற்கு சொல்லியுள்ளது. ஜெர்மனியைச் சேர்ந்த இங்கோ(ingo ) மற்றும் எல்கே(Elke ) என்ற தம்பதியை ஒரு தெருவில் எதர்ச்சையாக ஃபோட்டோகிராஃபர் சந்தித்துள்ளார். 2 வாரங்களுக்கு முன் திருமணமான அவர்களது காதல் கதையை அவர் கேட்டறிந்து அதை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி, 19 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. இதில் எல்கே தனது கணவரை எப்படி சந்தித்தார் என்பதை பகிர்ந்துள்ளார்.

அதாவது வயதான பெண் எல்கே கூறியது : செய்தித்தாள் மூலம் ஒரு பார்ட்னரை தேடினேன் அதில் எனக்கு 100–க்கும் அதிகமான நபர்கள் சம்மதம் தெரிவித்திருந்தனர். அதில் இங்கோவும் ஒருவர் என்றும் கூறியுள்ளார். மேலும் இங்கோ எப்போதும் எல்லாவற்றையும் பற்றி ஆர்வமாக இருப்பார். எப்போதும் புதிய மற்றும் ஆர்வமுள்ள விஷயங்களைத் தேடிக்கொண்டிருப்பர்..என கூறினார்.

தொடர்ந்து இங்கோ கூறியது; தொழிலில் கட்டிடக்கலை நிபுணரான இங்கோ, “நான் கட்டிடக்கலை படித்தேன், அதனால்தான் நான் எப்போதும் ஆர்வமாக இருக்கிறேன், நான் மேலே உள்ள விஷயங்களைப் பார்க்கிறேன், கீழே பார்க்கவில்லை.” என பாசிட்டிவ் மனதுடன் பேசினார்.

இந்த தம்பதியின் காதல் கதை உலக மக்களை உத்வேகப்படுத்தியுள்ளது. எந்த வயதிலும் காதல் கிடைக்கும் என்பதை இவர்களது கதை உணர்த்துகிறது. இதை பார்த்த பலரும் தங்களது பாசிட்டிவான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Christopher Ward (@modelstrangers)

“>