
தமிழகத்தை பொறுத்தவரையில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் முக்கிய விசேஷ நாட்களில் அரசு சார்பில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் வரும் ஆடி திருவாதிரை நாள் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு இன்று ஒரு நாள் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்ய ஆகஸ்ட் 17 வேலை நாளாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது