
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பிரியா ஆனந்த். இவர் தமிழில் சில படங்களில் ஹீரோயின் ஆக நடித்துள்ள கடைசியாக தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்திருந்தார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை பிரியா ஆனந்த் சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்தார். அப்போது அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது.
அதற்கு அவர் தனக்கு பிடித்த ஹீரோ தமிழில் மிர்ச்சி சிவா என்றும் கன்னடத்தில் புனித் ராஜ்குமார் என்றும் கூறினார். அதன்பிறகு காசுக்காக ஏதேனும் படத்தில் நடித்தீர்களா என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் ஆமாம் என்று கூறியதோடு அந்த சமயத்தில் வீட்டுக்கு இஎம்ஐ செலுத்த வேண்டி இருந்ததால் ஒரு படத்தில் காசுக்காக கதை கூட கேட்காமல் நடித்தேன் என்று கூறியுள்ளார். மேலும் கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் மறைந்த புனித் ராஜ்குமாரின் கடைசி படத்தில் பிரியா ஆனந்த் ஹீரோயின் ஆக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.