கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் தொடர்ந்து மீட்பு பணிகள் என்பது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கி ஜிசா என்ற பெண் மாயமானார். இவரை பல நாட்களாக தேடிய நிலையில் தற்போது ஒரே ஒரு கை மட்டும் கிடைத்துள்ளது. அதாவது அந்த விரலில் அவருடைய திருமண மோதிரமும் கணவரின் பெயரும் பொறிக்கப்பட்டிருந்தது. இதை வைத்துதான் அந்த கை தன்னுடைய மகளின் கை என்று அடையாளம் கண்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து ஜிசாவின் தந்தை ராமசாமி அந்த கையை ஒரு வெள்ளை துணியால் சுற்றி இறுதி சடங்கு செய்தார். அந்த ஒரு கையை மட்டும் தகன மேடையில் வைத்த நிலையில் அவர் கதறி துடித்தார். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை கலங்க செய்ததோடு கேட்கும் நமக்கே மிகவும் வேதனையை தருவதாக இருக்கிறது. மேலும் இது தொடர்பான புகைப்படம் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.