கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவாலிலிருந்தே சர்வதேச அளவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட தொடங்கிவிட்டது. இதன் எதிரொலியாக பல நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை வேலை நீக்கம் செய்து வருகின்றன. நடைபாண்டில் மட்டும் உலகம் முழுவதும் 1.24 லட்சம் ஊழியர்களை தொழில் நுட்ப நிறுவனங்கள் பணிநீக்கம் செய்துள்ளது. ஜூலை மாதத்தில் மட்டும் 34 நிறுவனங்களில் இருந்து 8000 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதில் இன்டேல் 15,000, மைக்ரோசாஃப்ட் ஆயிரம், யுகேஜி 2200 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. சமூக வலைத்தளமான X இன் மாற்று என அறியப்பட்ட KOO அனைத்து ஊழியர்களையும் பணியில் இருந்து நீக்கி உள்ளது. இனிவரும் நாட்களிலும் வேலை இழப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கும் என கூறப்படுவதால் இது மற்ற ஊழியர்கள் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.