இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரரான கிரஹாம் தோர்ப் (55) காலமானார். இந்த தகவலை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. இவர் 1993 முதல் 2005 ஆம் ஆண்டுக்கு இடையில் இங்கிலாந்துக்காக 100 டெஸ்ட் மட்டும் 82 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் டெஸ்டில் 44.66 சராசரியில் 16 சதங்கள் மற்றும் 6,744 ரன்கள் எடுத்தார்.

82 ஒரு நாள் போட்டிகளில் 2350 ரன்கள் எடுத்துள்ளார். 2002 ஆம் ஆண்டு ஒரு நாள் மற்றும் 2005 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து இவர் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இவருடைய மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.