
தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் எஸ்.எஸ்.ராஜமவுலி. இவர் 2001 ஆம் ஆண்டு வெளியான “ஸ்டூடன்ட் நம்பர் ஒன்” என்ற படத்தை இயக்கியதன் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இந்த முதல் படமே அவருக்கு பெரும் வெற்றிப்படமாக மாறியது. அதன்பின் 2012 ம் ஆண்டு இவர் “நான் ஈ” என்ற படத்தை நேரடியாக தெலுங்கிலும் தமிழிலும் இயக்கியுள்ளார். இந்த படம் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்ற படம் ஆகும். இதைத்தொடர்ந்து அவர் இயக்கிய பாகுபலி, ஆர்ஆர்ஆர் போன்ற படங்கள் உலகளவில் வசூல் சாதனை புரிந்த வெற்றி படங்களாகும்.
இந்நிலையில் தற்போது ஒரு பேட்டியில் பேசிய அவர் ராமரை விட ராவணனை எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார். நாம் அனைவரும் சிறு வயதிலிருந்தே பாண்டவர்களை பற்றி புத்தகங்களில் படித்திருப்போம். அதில் ராமரை நல்லவராகவும் ராவணனை கெட்டவராகவும் சித்தரித்து இருந்திருக்கும். மேலும் எனக்கு எப்போதும் சக்தி வாய்ந்த வில்லன்களையே மிகவும் பிடிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.