பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் ரவுடிகளால் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆம்ஸ்டாங் கொலை வழக்கில் ஒவ்வொரு கைதிகளாக சிக்கும் நிலையில் பல திடுக்கிடும் தகவல்களும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அஸ்வத்தாமனின் தந்தை நாகேந்திரன் பெயர் எஃப் ஐ ஆர் இல் சேர்க்கப்பட்டுள்ளது. ஆயுள் சிறைவாசியாக வேலூர் சிறையில் இருந்தாலும் ஆம்ஸ்ட்ராங் கொலையில் இவர் முக்கிய மூளையாக செயல்பட்டுள்ளார். அவரை கைது செய்வதற்கான ஆணையை சிறை நிர்வாகத்திடம் போலீசார் வழங்கியுள்ளனர். இவர் வடசென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் சில பகுதிகளை 30 ஆண்டுகளுக்கு மேல் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்.