பிரேசிலின் சாவ் பாலோ மாநிலத்தில் வியோபாஸ் விமானமான 2283 என்ற விமானம் 62 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. வின்ஹெடோ நகரில் சென்று கொண்டிருந்த போது விமானம் நிலை தடுமாறு கீழே விழுந்து வெடித்தது. இது தொடர்பாக வெளியான வீடியோவில், விமானம் நடுவானில் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுகிறது.

பிறகு வின்ஹெடோ நகரில் உள்ள வீடுகளின் மீது தலைகீழாக கவிழ்ந்து விழுந்தது. இதில் சில நொடிகளில் விமானத்தின் ஒரு பெரிய பகுதியில் தீப்பிடித்து எரிந்து விமானத்தில் இருந்து பெரிய கரும்புகை வானத்தை நோக்கி வெளியேறுகிறது. இந்த விபத்தில் 70 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பலியானவர்களின் விவரம் இன்னும் தெரியவில்லை. நேரில் கண்ட சாட்சிகள் மற்றும் வீடியோக்களின் கூற்றுப்படி, விமானம் காற்றில் சுழன்று தரையில் மோதியது தெரியவந்துள்ளது.