மும்பை தாதர் ரயில் நிலையத்தில் 2 நபர்கள் ஒரு பையை தூக்க முடியாமல் கஷ்டப்பட்டு தூக்கிக்கொண்டிருந்தனர். அப்போது ரயில்வே போலீசார் அதை கவனித்து கொண்டிருந்தனர். போலீசாருக்கு அவர்கள் இருவரின் செயல்பாடு மீது சந்தேகம் எழுந்தது உடனே அவர்கள் அருகில் சென்று பையை திறக்க கூறினர்..  அந்தப் பையைத் திறந்து பார்த்ததும் போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.

அதில் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டிருந்தார். அவர்களிடம் போலீசார் கேள்விகளை கேட்க ஆரம்பித்தனர். அவர்கள் ஏதும் கூறவில்லை;  அதன் பின்பு தான் சிக்கிய இருவரும் பேசவோ கேட்கவோ தெரியாத காது கேளாதவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதனால் போலீஸ் விசாரணை கடினமாக இருந்தது. பின்னர் போலீஸ் காவலரின் காது கேளாத 24 வயது மகன் உதவியுடன் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இந்தக் கொலையில் இன்னொரு அதிர்ச்சி தகவலும் வெளிவந்துள்ளது. கொல்லப்பட்ட நபரின் மனைவிக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அந்த பெண்ணுக்கு காது கேளாது. இதில் கொல்லப்பட்ட நபரின் மனைவிக்கும், கைது செய்யப்பட்ட நபருக்கும் இடையே திருமணத்துக்கு மீறிய உறவு இருந்ததாகவும், இது கணவருக்கு தெரிந்ததால் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்தக் கொலை நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இன்னும் ஒரு அதிர்ச்சியான தகவல் கிடைத்து, இந்தக் கொலைக்கு உதவியாக மற்ற நாடுகளில் இருக்கும் காது கேளாதவர்களும் இருந்துள்ளனர். வீடியோ கால் மூலம் இந்தக் கொலை நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.