இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அதனால் ஆதார் கார்டில் உள்ள அனைத்து விவரங்களையும் எப்போதும் அப்டேட்டாக வைத்திருக்க அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. ஆதாரில் எந்த ஒரு விவரங்களையும் அப்டேட் செய்ய வேண்டும் என்றால் மொபைல் எண் அவசியம். இப்படியான சூழலில் ஆதாரில் எந்த மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளது என்பதை நாம் கண்டறிய இதோ எளிய வழி.

அதற்கு முதலில் https://uidai.gov.in என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று எனது ஆதார் பிரிவில் ஆதார் சேவைகளில் ஆதார் எண் சரிபார்ப்பு என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

அதன் பிறகு ஆதார் எண் மற்றும் கேப்சாவை உள்ளிட வேண்டும்.

சரி பார்க்க தொடரவும் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

உங்களது மொபைல் நம்பர் ஆதார் இணைக்கப்பட்டிருந்தால் அந்த மொபைல் நம்பரின் கடைசி மூன்று இலக்கங்கள் தெரியும்.

மொபைல் எண் காலியாக இருந்தால் அந்த ஆதார் எண்ணுடன் எந்த தொலைபேசி எண்ணும் இணைக்கப்படவில்லை என்று அர்த்தம்.