கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் பூட்டை என்ற கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் மற்றும் சத்யா தம்பதியினரின் மகள் அதிசயா (7). இந்த சிறுமி அண்மையில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

அதாவது தாய் சத்தியா சிறுமியை கிணற்றில் வீசி கொலை செய்தது தெரியவந்தது. கைதான அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், சிலரிடம் நான் வாங்கிய ஐந்து லட்சம் ரூபாய் கடனை திருப்பித் தர முடியவில்லை. வீட்டில் துக்க நிகழ்வு நடந்தால் கடும்காரர்கள் பணம் கேட்க மாட்டார்கள் என்று நினைத்தே மகளை கொன்று விட்டேன் என தெரிவித்துள்ளார்.