
ஐரோப்பாவில் கடந்த ஆண்டில் ஏற்பட்ட வெப்ப அலையில் பாதிக்கப்பட்டு 47 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது 2022-ஐ விட குறைவாக இருந்தாலும், கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பம் அதிகரித்து பேரழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. ஆண்களுக்கு ஒப்பாக பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிரீஸ், பல்கேரியா, இத்தாலி, மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் இந்த வெப்ப அலைக்கு அதிகம் பாதிக்கப்பட்டது. ஐரோப்பாவின் தெற்குப் பகுதி மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டது. தரவுகள் முழுமையாக இல்லை என்பதால், உண்மையான இறப்பு எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக மோசமான வருடமாக 2023 அமைந்ததாக ஐரோப்பிய மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
80 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த வெப்ப அலை காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், இந்த ஆண்டு வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், எதிர்காலத்தில் மேலும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பாக உள்ளது என விஞ்ஞானிகள் எச்சரிக்கையளிக்கின்றனர்.
இந்த வெப்ப அலையால் பொருளாதார இழப்புகள், உணவு தட்டுப்பாடு, மற்றும் சுற்றுச்சூழல் மாசு போன்ற பல பிரச்சனைகள் ஐரோப்பாவை தாக்கியுள்ளன. உலக நாடுகள் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரமாக எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதை இந்த சம்பவம் உணர்த்துகிறது.