
ஆந்திரப் பிரதேசம் மாநிலம் பூபாலி பள்ளி மாவட்டம் பெத்தம்பேட்டையில் லஸ்மையா(62) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த திங்கட்கிழமை காலை மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த நிலையில் தந்தையின் மரணத்தை ஜீரணிக்க முடியாத அவருடைய மகன் கிருஷ்ணம்ராஜ்(30) கதறி அழுதபடி இறுதிச் சடங்குகளை செய்துள்ளார். அதன் பிறகும் தனது தந்தை இல்லாததை ஏற்றுக் கொள்ள முடியாத அவர் மிகுந்த சோகத்தில் இருந்து வந்த நிலையில் அவருக்கு மாலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் மயங்கி விழுந்த அவரை குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். தந்தை உயிரிழப்பை தாங்க முடியாமல் மகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.