
தெலுங்கானா மாநிலத்தில் தற்போது மது விருந்துக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது முறையின்றி வீடுகள், ஹோட்டல்கள் மற்றும் தனியார் விடுதிகளில் மது விருந்துகள் நடத்தப்படுவதால் பல அசம்பாவித சம்பவங்கள் அரங்கேறுகிறது. இதனை கட்டுப்படுத்த காவல்துறையினரும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்நிலையில் தற்போது இந்த மது பார்ட்டியால் பெண்கள் மற்றும் சிறுவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது. இதனால்தான் மது பார்ட்டிக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு பார்ட்டியில் 6 மது பாட்டில்கள் மட்டும்தான் இடம்பெற வேண்டும்.
அதற்கு மேல் வாங்க வேண்டும் என்றால் நிச்சயம் அனுமதி பெற வேண்டும். அதன் பிறகு வீடுகள் மற்றும் விடுதிகளில் பார்ட்டி நடத்தினால் அதற்கு ரூ.10,000 வரை கட்டணம் செலுத்தி அனுமதி பெற வேண்டும். இதேபோன்று வணிக வளாகங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ள பகுதிகள் மற்றும் ஹோட்டல்களில் நடத்தினால் அங்கு வசூலிக்கப்படும் டிக்கெட் கட்டணத்தை பொறுத்து முன்னதாகவே கட்டணத்தை செலுத்தி அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும். இதைத்தொடர்ந்து 21 வயதுக்கு உட்பட்டவர்கள் எந்த காரணத்தை கொண்டும் விருந்தில் கலந்து கொள்ளக் கூடாது. மேலும் அனுமதி இன்றி பார்ட்டி நடத்தினால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படுவதோடு உரிமையாளர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது