
ஆப்பிரிக்கா நாடுகளில் குரங்கம்மை என்ற தொற்று நோய் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் சுவீடன் நாட்டிலும் இந்தத் தொற்று பரவி இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் அவசர நிலையை குறித்து முன்கூட்டியே உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. அதோடு தமிழக பொது சுகாதாரத்துறை, மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கும், தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களின் சுகாதார அதிகாரிகளுக்கும் அறிக்கை ஒன்றை அனுப்பியது. அதில் கூறியிருந்ததாவது, குரங்கம்மை பாதிப்பு உள்ளவர்கள் என்று யார் மீதாவது சந்தேகம் இருந்தால் அவர்களை உடனடியாக தவிர்க்க வேண்டும். அதுமட்டுமின்றி அதிகாரிகள் எச்சிரிக்கையாக இருக்க வேண்டும்.
குறிப்பாக காங்கோ மற்றும் மத்திய ஆப்ரிக்கா நாடுகளில் இருந்து வருபவர்கள் மீது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். விமான பயணிகளுக்கு வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இதைத்தொடர்ந்து கடந்த 21 நாட்களில் குரங்கம்மை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய வேண்டும். அதோடு தொற்று அறிகுறி இருப்பவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். விமானத்தில் பயணிக்கும் பயணிகளில் யாருக்காவது தொற்று இருப்பது கண்டறியப்பட்டால், அவர்கள் உடனடியாக விமான நிறுவனத்திற்கு தெரிவிக்க வேண்டும். மேலும் அந்த நிறுவனம் தொற்று பரவாமல் இருக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது.