உத்திர பிரதேச மாநிலத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் என்ற ரயில் தண்டவாளத்தில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென விபத்துக்குள்ளானது.இந்த விபத்தால் 20க்கும் மேற்பட்ட பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டது. ஆனால் அந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

அதோடு விபத்து நடந்து இடத்திலிருந்து பயணிகளை கான்பூர் ரயில் நிலையத்திற்கு கொண்டு செல்ல பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விபத்திற்கு காரணம் ரயிலின் இயக்கி ஒரு கல்லின் மீது மோதியது தான் என்று ரயில்வே துறை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இந்த விபத்தின் காரணமாக அந்த வழியே செல்லும் 7 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் 3 ரயில்கள் வழித்தடம் மாற்றப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்து குறித்து ரயில்வே துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.