
தமிழகத்தில் ஆகஸ்ட் 22 ஆம் தேதி மெட்ராஸ் தினம் கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு தமிழக அரசு மற்றும் அருங்காட்சியத்துறை இணைந்து ரீல்ஸ் போட்டி நடத்த முடிவு செய்துள்ளது. இந்த போட்டியில் முதல் பரிசாக ரூ.10000-ம், இரண்டாம் பரிசாக ரூ.7500-ம், மூன்றாம் பரிசாக ரூ.5000-ம் வழங்கப்பட இருக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்க கூடிய ஒருவர் குறைந்தபட்சம் 2 ரீல்ஸ் வரை செய்து அனுப்பலாம். இதில் ஒரு வீடியோ 30 முதல் 90 வினாடிகளுக்குள் இருக்க வேண்டும்.
அதோடு ஏதாவது ஒரு கலாச்சாரம் மற்றும் கட்டிடம் போன்ற அம்சங்களை உள்ளடக்கியதாக வீடியோ இருக்க வேண்டும். குறிப்பாக சென்னை அருங்காட்சியகத்தின் அழகை எடுத்துரைக்கும் விதமாக வீடியோ அமையலாம். இந்த போட்டியில் பங்கேற்பவர்கள் பேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோக்களை வெளியிட்டு தமிழக அருங்காட்சியத் துறையின் அதிகாரப்பூர்வ பக்கத்தை கொலாப்ரேட் செய்யலாம். மேலும் இந்த வீடியோக்களை நாளை முதல் செப்டம்பர் 3-ம் தேதி வரை வெளியிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.