தமிழக அரசின் கல்வி டிவியில் இன்று முதல் 5 நாட்களுக்கு கட்டணமில்லா இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற இருக்கிறது. அதன்படி டிஎன்பிஎஸ்சி தேர்வுகள், ஆசிரியர் தேர்வுகள், ரயில்வே மற்றும் போலீஸ் பணியிடங்கள் போன்ற தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் கல்வி டிவி மூலம் கொடுக்கப்படும்.

இதேபோன்று TN career services employment என்ற youtube சேனலிலும் நேரடியாக பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பப்படும். மேலும் அதன்படி இன்று முதல் ஆகஸ்ட் 29ஆம் தேதி வரை நாள்தோறும் காலை 7:00 மணி முதல் 9 மணி வரை நேரலையிலும், இரவு 7:00 மணி முதல் 9 மணி வரை மறுஒளிபரப்பும் செய்யப்படும். இந்த நல்வாய்ப்பினை தேர்வர்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.