
உத்திரபிரதேச மாநிலம் மான்காபூர் என்னும் பகுதியில் அசோக் குமார் என்பவர் ரசித்து வருகிறார். இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் அனிதா திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். 2வது மகள் சுனிதா 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று வீட்டில் இருக்கிறார். 3வது மகள் புனிதா 10ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று அதிகாலை நேரத்தில் சுனிதா மற்றும் அனிதா வீட்டிலிருந்து வெளியே சென்றனர்.
இரவு வெகு நேரம் வரை வீடு திரும்பாததால் இவர்களின் தந்தை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவர்களை தேடினார். அப்போது இரு மகள்களும் பிசுசி ஆற்றில் ஒன்றாக தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இந்த தகவல் அப்பகுதி காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் ஊர் மக்களின் உதவியுடன் அவர்கள் இருவரின் உடல்களையும் மீட்டனர்.
அப்போது அவர்கள் இருவரும் தங்களுடைய கைகளை துணியால் ஒன்றாக கட்டிக்கொண்டு ஆற்றில் குதித்து தற்கொலை செய்தது தெரிய வந்தது. இதனை கண்ட அசோக்குமார் தனது மகள்களின் தற்கொலைக்கு காரணம் மூத்த மகள் அனிதாவின் கணவர் தான் என்று கூறினார். அதோடு அவரின் பாலியல் துன்புறுத்தல் தாங்க முடியாமல் தனது மகள்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்றும் குற்றம் சாட்டினார். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.