
புதுச்சேரி மாவட்டத்தில் கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது அரசுக்கும் அப்போதைய துணைநிலை ஆளுநருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக ஆளுநர் உத்தரவின்படி அங்குள்ள ரேஷன் கடைகள் மூடப்பட்டது.
இந்நிலையில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் இலவச அரிசிகளுக்கு பதிலாக பயனாளர்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டது. ஆனால் அதில் மக்களுக்கு விருப்பமில்லை. ஏனெனில் வெளிச்சந்தையில் விற்கப்படும் அரிசியின் விலை கடுமையாக கூட தொடங்கியது. அதனால் ரேஷன் கடைகளில் அரிசி வழங்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனை நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது முதல்வர் ரங்கசாமியிடம் இந்த கோரிக்கையை முன் வைத்தனர். இதையடுத்து கடந்த 7 ஆண்டுகளாக மூடி கிடந்த ரேஷன் கடைகளை திறக்க அரசு நடவடிக்கை எடுத்தது. அதோடு முந்தைய ஆளுநரான சி.பி ராதாகிருஷ்ணனும் இதற்கு அனுமதி வழங்கினார்.
இதைத்தொடர்ந்து மூட ப்பட்டிருந்த ரேஷன் கடைகளை திறந்து இலவச அரிசிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி கூறினார். ஏழை மக்களுக்கான சிகப்பு கார்டு வைத்திருப்பவர்களுக்கு 20 கி அரிசியும், மஞ்சள் கார்டு வைத்திருப்பவர்களுக்கு 10 கி அரிசியும் இலவசமாக முந்தைய காலத்தில் இருந்து வழங்கப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது சிவப்பு கார்டு வைத்திருப்பவர்களுக்கு 20 கி அரிசியும், மஞ்சள் கார்டு வைத்திருப்பவருக்கு 1.ரூ விலையில் 20 கிலோ அரிசி வழங்கப்பட உள்ளது. இதனை முதல்வர் ரங்கசாமி உறுதி செய்தார். இதுகுறித்து சட்டப்பேரவை தலைவர் செல்வம் கூறியதாவது, சிவப்பு கார்டு வைத்திருப்பவர்களுக்கு 20 கி இலவச அரிசியும், மஞ்சள் கார்டு வைத்திருப்பவர்களுக்கு 1.ரூ விலையில் 20 கி அரிசியும், 20 ரூபாய்க்கு துவரம் பருப்பும், 60 ரூபாய்க்கு பாமாயிலும், 25 ரூபாய்க்கு சர்க்கரை மற்றும் உப்பு போன்ற பொருள்கள் வழங்குவதற்காக டெண்டர் கோரியுள்ளது என்று கூறினார்.