
தமிழக வெற்றி கழகத்தின் கொடி மற்றும் கட்சி பாடல் இன்று அறிமுகமாக இருப்பதாக தலைவர் விஜய் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்று நாடெங்கும் தமிழக வெற்றி கழகத்தின் கொடி பறக்க போவதாக தெரிவித்துள்ளார். அதன்படி சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இதற்காக ஏற்கனவே 40 அடி உயரத்தில் கொடி கம்பம் நடப்பட்டு விட்டது.
இந்த விழாவில் குறைந்த அளவிலான நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொள்ள இருக்கும் நிலையில் காலை 11 மணிக்கு விஜய் கொடியை ஏற்றுகிறார். இதைத்தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் மிக பிரமாண்டமாக நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தமிழக வெற்றி கழகத்திற்கு தற்போது உறுப்பினர்கள் சேர்க்கை பணி நடைபெற்று வரும் நிலையில் ஏற்கனவே நடிகராக இருக்கும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனால் ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களும் நடிகர் விஜயின் கட்சிக்கொடி மற்றும் பாடலுக்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.