ஆந்திர மாநிலம் எமிக்கானூர் என்னும் பகுதியில் சாலை ஓரத்தில் பசுமாடு ஒன்று வயிறு பெருத்த படி எழும்ப முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருந்தது. இதனை அந்த வழியே சென்ற வக்கீல் திம்மப்பா பார்த்தார். பசுமாட்டின் அந்த அவல நிலையை கண்டு வேதனை அடைந்த அவர் கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் கொடுத்தார்.

அவர் கொடுத்த தகவலின் படி அங்கு வந்த கால்நடை மருத்துவர்கள் பசுவை பரிசோதனை செய்தனர். அப்போது பசுவின் வயிற்றில் ஏராளமான பிளாஸ்டிக் குப்பைகள் இருப்பது தெரிந்தது. இதைத் தொடர்ந்து மருத்துவர்கள் மாட்டின் வயிற்றில் இருந்த 70 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அறுவை சிகிச்சை செய்து அகற்றினர். தற்போது அந்த பசு நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்படுத்தியது.