இந்தியாவில் பாரத் எஸ்டேட் வங்கி மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிளைகளை கொண்ட வங்கி ஆக இருக்கிறது. இந்த வங்கியினால் ஏராளமான மக்கள் கடன் பெறுவது, சேமிப்பு,அடமானம் போன்றவற்றால் தினமும் பயன் பெற்று வருகிறார்கள். தற்போது இந்த வங்கியில் புதிய அசத்தலான திட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது.

அதாவது அம்ரித் கைலாஷ் என்னும் வைப்பு திட்டமான இந்த திட்டத்தில் நிலையான வட்டி விகிதம், உத்தரவாதமான வருமானம் மற்றும் கால அளவு போன்றவை கிடைக்கின்றன. அதோடு இந்த திட்டம் முதலீட்டாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. இந்த அம்ரிஷ் கலாஷ் திட்டம் டிசம்பர் 31,2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 400 நாட்கள் கால அளவில் மார்ச் 31,2024 வரை இந்த திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

எஸ்பிஐ நடத்திவரும் இந்தத் திட்டத்தில் 400 நாட்களுக்குள் 5 லட்சத்தை முதலீடு செய்ய முடியும். இதைத்தொடர்ந்து இந்த திட்டத்தில் குடிமக்களுக்கு 7.10 சதவீத வட்டியும் மூத்த குடி மக்களுக்கு 7.60 சதவீத வட்டியும் கிடைக்கும்.எஸ்பிஐ யின் இந்த பிக்சட் டெபாசிட் திட்டம் உள்நாட்டுவருக்கும், NRI களுக்கும் பொருந்தும்.இந்த திட்டத்தில் ஒரு நபருக்கு 2 கோடி வரை முதலீடு செய்ய முடியும். இந்த திட்டத்தில் டிசம்பர் 30,2024 வரை இணைந்து கொள்ளலாம்.

இதில் குடி மக்கள் ரூ.5 லட்சத்தை 400 நாட்களில் முதலீடு செய்தால் இறுதியில் ரூ.5,40,088 தொகையை பெற முடியும். இதே மூத்த குடிமக்கள் முதலீடு செய்யும்போது ரூ 5,43,002 கிடைக்கும். இந்த திட்டத்தினால் மற்ற வங்கிகளில் கிடைக்கும் வட்டியை விட அதிக வட்டியை பெற முடியும். இந்த டெபாசிட் திட்டத்திற்கு எஸ்பிஐ வங்கியை நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம். மேலும் எஸ்பிஐ YONO ஆப் டவுன்லோட் செய்து இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்.