
தமிழ்நாட்டில் தற்போது ரகசியமாக கருவில் உள்ள பாலினம் என்னவென்று கண்டறிந்து தெரியப்படுத்துவது ஆங்காங்கே நடந்து கொண்டு வருகிறது. தற்போது தர்மபுரி மாவட்டத்தில் பாலினம் கண்டறியும் கும்பல் ஒன்று சிக்கி உள்ளது. இதைத்தொடர்ந்து தர்மபுரி மாவட்டத்தில் மூன்று மாதங்களில் சட்டவிரோதமாக கருவில் பாலினம் கண்டறிந்து தெரிவித்து வந்த மூன்று கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.
இந்த குற்ற செயலில் ஈடுபடுபவர்களுக்கு தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். இவ்வாறு கருவிலேயே பாலினம் கண்டறிந்து கூறும் செயல் சட்ட விரோதமான செயல் ஆகும் என்று அவர் கூறினார். அத்துடன் இதுபோன்ற சட்ட விரோதமான செயலில் ஈடுபட்டால் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.