
இந்தோனேசியாவில் ஆற்றின் அருகே உள்ள பாலத்தில் அலி என்ற ஒருவர் காரில் சென்றுள்ளார். அப்போது ஆற்றில் ஒருவரின் கால்கள் மிதப்பது போல தெரிந்துள்ளது. இதைப் பார்த்த அந்த நபர் யாரோ நீந்துகிறார் என்று நினைத்துள்ளார். அதன் பின் அவர் நீந்தவில்லை, ஒரு முதலை அந்தப் பெண்ணை தண்ணீருக்குள் இழுத்துச் செல்வதை பார்த்து, அதிர்ச்சியடைந்த அவர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
அந்த தகவலின் படி விரைந்து வந்த காவல்துறையினர் 14 அடி நீளமுள்ள ராட்ச முதலையை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். அதன் பின்பு முதலையின் வயிற்றை வெட்டிப் பார்த்தபோது, ஒரு பெண்ணின் உடல் இருந்தது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் உயிரிழந்த பெண் அப்பகுதியை சேர்ந்த ஹலிமா (54) என்பது தெரியவந்தது.

அதோடு அவர் அந்த ஆற்றிற்கு சிற்பிகளை சேகரிக்க சென்றுள்ளார். அப்போது இந்த நிகழ்வை ஏற்பட்டுள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்தனர் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது