இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) இல் இருந்து வந்ததாகக் கூறி மக்களுக்கு செய்யப்படும் மோசடி அழைப்புகள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த மாதிரியான மோசடி செய்பவர்கள் முன்பதிவு செய்யப்பட்ட , உரையாடல்களைப் பயன்படுத்தி நுகர்வோரைப் பயமுறுத்துகிறார்கள், தனிப்பட்ட தகவல்களைக் கேட்கின்றனர் மற்றும் அவர்களின் செல் எண்களைத் தடைசெய்வதாக அச்சுறுத்துகிறார்கள்

நாங்கள்(TRAI) எஸ்எம்எஸ் மூலமாகவோ அல்லது அழைப்புகள் மூலமாகவோ வாடிக்கையாளர்களின் எண்களைத் துண்டிப்பது பற்றி ஒருபோதும் தொடர்பு கொள்ள மாட்டோம் என்று TRAI தெளிவுபடுத்தியுள்ளது.

உங்களுக்கு அத்தகைய அழைப்பு வந்தால் , அது ஒரு மோசடி முயற்சியாக இருக்கலாம். நீங்கள் அதை
உண்மையென எடுத்துக்கொள்ள வேண்டாம்.

மொபைல் எண்ணைத் துண்டிப்பதற்கான உண்மையான காரணம் பொதுவாக பில்லிங் சிக்கல்கள், KYC சரிபார்ப்பு அல்லது முறைகேடு. இந்தச் சமயங்களில் உங்கள் எண்ணைத் துண்டிப்பதற்கு உங்கள் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர் (TSP) பொறுப்பு.

எச்சரிக்கையாக இருங்கள், அத்தகைய அழைப்பு வந்தால் பீதி அடைய வேண்டாம். சரிபார்க்க, அங்கீகரிக்கப்பட்ட அழைப்பு மையங்கள் அல்லது உங்கள் டெலிகாம் வழங்குநரின் வாடிக்கையாளர் ஆதரவைத்( customer care ) தொடர்பு கொள்ளவும்.

இந்தச் சிக்கலைச் சமாளிக்க மக்கள் வசதிக்காக , உதவ, சஞ்சார் சாத்தி ( sanchar saathi) பிளாட்ஃபார்மில் உள்ள சேவை மூலம் சந்தேகத்திற்குரிய மோசடி அழைப்புகளைப் புகாரளிக்கலாம். இது தொலைத்தொடர்பு வளங்களை சைபர் கிரைம் மற்றும் நிதி மோசடிகளுக்கு தவறாக பயன்படுத்துவதை தடுக்க உதவும்.