
மதுரை ஜெய்ஹிந்துபுரத்தைச் சேர்ந்த 23 வயதான கீர்த்தனா என்பவர், தனது கணவர் சுரேஷ்குமார் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கீர்த்தனாவுக்கும் சிவகங்கையைச் சேர்ந்த சுரேஷ்குமாருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு சுரேஷ்குமார் குவைத்துக்கு வேலைக்கு சென்றுவிட்டார். இதனால் கீர்த்தனா தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார்.
இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனமுடைந்த கீர்த்தனா, தனது தந்தை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து ஜெய்ஹிந்துபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், திருமணமாகி 6 மாதங்களே ஆவதால், வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.