தமாகா கட்சியின் பொதுச்செயலாளர் எம். யுவராஜா. இவர் நடிகர் விஜய் நேற்று தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியை அறிமுகம் செய்து வைத்த நிலையில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு வேண்டுகோளும் எடுத்து அறிக்கை விடுத்துள்ளார். அதில் கட்சி கொடியை அறிமுகப்படுத்தி வைத்து நேரடியாக அரசியல் களத்திற்குள்  நுழைந்த தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு என்னுடைய வாழ்த்துக்கள். அவர் தமிழக அரசியலில் வெற்றி வாகை சூட மனமார வாழ்த்துகிறேன்.

தமிழ் திரையுலகம் தான் நடிகர் விஜய்க்கு வாழ்க்கை கொடுத்துள்ளது. தமிழ் திரையுலகில் நூறுக்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்படாமல் இருக்கிறது. கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை அப்போதைய திமுக ஆட்சிக்காலத்தின் போது ஒரே ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் திரைத்துறையே முடங்கியது. அதேபோன்று தற்போதைய திமுக ஆட்சி காலத்திலும் திரை துறை முடங்கியுள்ளது. எனவே தமிழக மக்களுக்கு நல்லது செய்ய வந்துள்ள விஜய் முதலில் திரைத்துறையை அந்த குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார்.